செவ்வாய், 17 நவம்பர், 2015

புத்திசாலி ஆக இருந்தால் மட்டும் பணக்காரன் ஆவதில்லை!

புத்திசாலி பணக்காரன் ஆவதில்லை! ஏன்?

மிகப்பெரிய அறிவாளியாக ஒருவன் இருந்தாலும் அவன் சம்பாதிக்க முடியாமல் கஷ்டபடும் சூழ்நிலை நடைமுறையில் நாம் காண்பதுதான். அறிவுக்கும் பணம் சம்பாதிப்பதற்கும் தொடர்பு இல்லை என்பது இதன் மூலம் அறியலாம். வெற்றி பெற்ற மனிதர் எல்லாம் புத்திசாலி இல்லை. புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பது இல்லை என்று ஓரு சினிமா பாடல்கூட இருக்கிறது. ஏனோ தானோ என்று இருப்பவர்கள் சம்பாதிப்பார்கள். அவர்களுக்கு பொதுவான சின்ன விசயம் கூட தெரியாமல் இருப்பார்கள் ஆனால் கோடி கோடி சம்பாதிப்பார்கள்.  பெரிய அறிவாளியாக இருப்பார்கள் சிலர்.  அவர்களிடம் ஐந்து நிமிடத்தில் ஐந்து கோடி சம்பாதிக்கும் அறிவை பெற்று இருப்பார்கள். ஆனால் அவர்களால் பணம் சம்பாதிக்க கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பார்கள். இது ஏன் என்று அவர்களது ஜாதகத்தை பார்த்தால் தெரியும். அவர்களின் அத்தனை பேரின் ஜாதகத்திலும் பாக்கியஸ்தானம் கெட்டு இருப்பதை. அதனால்தான் அவர்கள் அறிவை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்க்கைக்கு கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். .

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை
புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை

பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லம் துன்பம்

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை

பருவம் வந்த அனைவருமே காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே சேர்ந்து போவதில்லை

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை

கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார் யாரை பார்த்து அழைப்பாள்?

புத்தியுள்ள மனிதரெல்லாம்
வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம்
புத்திசாலியில்லை... புத்திசாலியில்லை


படம் : அன்னை
பாடியவர் : சந்திரபாபு
பாடல் வரிகள் : கண்ணதாசன்
இசை : R சுதர்சனம்



வெற்றி பொன்மொழிகள்

  1. வாழ்வில் உன் தோல்வியைக் கண்டு மகிழும் ஒருவரையேனும் நீ பெற்றிருப்பின், உன் வாழ்வின் பெரிய முதல் தோல்வி அதுவாகவே இருக்கும்.
  2. உன் விதியை நீயே நிர்ணயம் செய் இல்லையென்றால் மற்றவர்கள் நிர்ணயித்து விடுவார்கள்.
  3. மரியாதை பெறும் ஒரே வழி அதனை முதலில் கொடுப்பதாகும்.
  4. திருப்தியும் பேரின்பமும் எம்முள் இருப்பின் நாம் மற்றவர்களால் விரும்பப்படுவோம்.
  5. பிடிவாதமும் கோபமும் உன் இயலாமையின் வெளிப்பாடாகும்.
  6. பொறுமையால் பெற்றவரும் உண்டு வாழ்வை இழந்தவரும் உண்டு.
  7. உன் சோம்பேறித்தனம் உன் வாழ்வின் தடைக்கல்லாய் அமையலாம்.
  8. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.
  9. அநியாத்திற்கு ஆயிரம் வக்கீல்கள் தேவை ஆனால், நியாயத்திற்கு கடவுளின் கருணை மட்டும் போதும். 
  10. வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதேபோல வாழ்வில், உயர்வும் ஒரே நாளில் கிட்டி விடாது. —அரிஸ்டாட்டில். 
  11. கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள்!- சுபாஷ் சந்திரபோஸ்.
வெற்றி கதை வெற்றி கதைகள்  கதை வெற்றி கதைகள் வெற்றிக் கதைகள் வெற்றி கதை
ஏழை மனிதர் ஒருவர் தெரு வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார். தெருவில் ஒரு பழங்கால நாணயம் கிடந்தது. அதை எடுத்துப் பார்த்தார். அந்த நாணயத்தில் துளை இருந்தது. துளையிட்ட நாணயம் கிடைத்தால் அதிர்ஷ்டம் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. எனவே, சந்தோஷமாக அதை எடுத்து தன்னுடைய சட்டைப் பையிலே பத்திரமாக வைத்துக் கொண்டார். வீட்டிற்கு சென்ற பின் அதனை ஒரு பாலிதின் கவரில் போட்டு, அதை ஒரு துணி கவரில் சீல் வைத்து பத்திரப்படுத்திக் கொண்டார். தனக்கு வந்த அதிர்ஷ்டத்தை தன் மனைவியிடமும் தெரிவித்தார். அதை எப்போதும் தனது சட்டைப் பையில் வைத்துக் கொண்டு அதை தொட்டு பார்த்துக் கொள்வார். ஆனால் அதனை வெளியில் எடுக்கமாட்டார். அந்த நாணயம் தனக்கு வாழ்வில் உயர்வைத் தரும் என்று நம்பி, தனது முழுத் திறனையும் பயன்படுத்தி உழைக்க ஆரம்பித்தார். பின்னர் வியாபாரம் செய்ய ஆரம்பித்து அதிலும் வெற்றி பெற்றார். அதன் பின்னர் பல வியாபார முயற்சிகளில் ஈடுபட்டு அனைத்திலும் வெற்றி பெற்றார். பணம், பதவி, புகழ் எல்லாம் அவரை வந்து சேர்ந்தது. அவரை எல்லோரும் பாராட்ட ஆரம்பித்தார்கள். அவர் எதைத் தொட்டாலும் வெற்றி என்ற நிலைமை. எல்லாம் அந்த துளையிட்ட காசோட மகிமை என்று நினைத்தார் அந்த மனிதர். இப்படியே பல ஆண்டுகள் கழிந்தன. ஒரு நாள் அந்த நாணயத்தை கண்ணாலே பார்க்க வேண்டும் என்ற ஆசை அந்த மனிதருக்கு வந்தது. அப்போது தன் மனைவியைக் கூப்பிட்டு, ரொம்ப நாளைக்குப் பிறகு என்னுடைய அதிர்ஷ்ட நாணயத்தை இன்றைக்கு வெளியே எடுத்துப் பார்க்கப் போகிறேன் என்று கூறினார் அந்த மனிதர். உடனே மனைவி, இப்ப அதைப் பார்க்க வேண்டாமே என்று மெதுவாக கூறினார். இல்லை, இல்லை! பார்த்தே தீர வேண்டும்! என்று சொல்லி சட்டைப் பையில் கையை விட்டு கவரை திறந்து, நாணயத்தை வெளியே எடுத்தார் அந்த மனிதர். அவருக்கு ஒரே ஆச்சரியம். அந்த நாணயத்தில் துளையே இல்லை. அப்படியே குழம்பிப் போய் நின்றார். அப்பொழுது அவரது மனைவி, உங்க சட்டை பையில் காசு இருப்பது நினைவில்லாமல் நான் தான் ஒரு நாள் உங்க சட்டை தூசியாக இருக்கு என்று ஜன்னலுக்கு வெளியே உதறினேன். அது தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடிப் பார்த்தேன். கிடைக்கவில்லை. அது இல்லை என்பது உங்களுக்கு தெரிந்தால் வருத்தப்படுவீர்கள் என்பதற்காக வேறு ஒரு நாணயத்தை அதே போன்று கவரில் போட்டு சட்டைப் பையில் போட்டு வைத்தேன் என்று கூறினாள். இது எப்ப நடந்தது? என்று கேட்டார் அந்த மனிதர். உங்களுக்கு காசு கிடைத்த மறு நாளே இது நடந்தது என்றாள் மனைவி. இதைக் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். அந்த மனிதருக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. அவருடைய தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சி. வாழ்க்கையிலே முன்னேற நினைக்கிறவர்களுக்கு தன்னம்பிக்கை மிகவும் முக்கியம். இந்தத் தன்னம்பிக்கையை மாணவ மாணவியருக்கு இளம் பருவத்திலேயே ஏற்படுத்தினால் அவர்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை.

வெற்றி ரகசியம்
உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்…’

என்ற திரைப்படப் பாடலைக் கேட்டிருப்பீர்கள். வெற்றிப் பாதையில் நாம் கடக்க வேண்டிய முதற்படி, நம்மை நாமே புரிந்து கொள்வது. ஏனென்றால், நம்மைப் பற்றி, நம் மனதில் வரைந்து வைத்துள்ள சுயசித்திரம்தான், ஒரு நாள் நிஜமாக போகிறது.

மனித மனம், ஒரு நிலையில் இல்லாத குரங்கு போன்றது. அதை ஒரு நிலைப்படுத்தி, “நாம் எப்படிப்பட்ட மனிதர்? நம் வாழ்க்கையில் என்னவெல்லாம் சாதிக்க வேண்டும்?’ என்ற கேள்விகளுக்கு நம்மிடத்தில் தெளிவான பதில் இருக்க வேண்டும்.

நம்மைப் பற்றி புரிந்து கொள்வதற்கு அடிப்படைத் தேவை, நாம், நம்மை முழுமையாக நேசிக்க வேண்டும்;
முதலில் நமக்கு நாம் உண்மையாக இருக்க வேண்டும்.

அடிப்படை குணங்கள், விருப்பு, வெறுப்பு, எதிர்பார்ப்புகள், தேவைகள்
பற்றிய தெளிவு இருக்க வேண்டும். நம் வாழ்க்கை லட்சியம் என்ன,

அதை அடைய எதை இழக்கத் தயாராக இருக்கிறோம்
என்ற கேள்விகளுக்கு, நம்மிடத்தில் பதில் தயாராக இருக்க வேண்டும்.

மனதை ஒரு நிலைப்படுத்த, ஒரு அமைதியான இடத்தில் நம்மைத் தனிமைப்படுத்தி, கண்களை மூடி மெதுவாகவும், சீராகவும் நீண்ட மூச்சை எடுத்து, உடலையும், மனதையும் தளர்த்திக் கொள்ள வேண்டும்.

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், இறைவனை வழிபடலாம் அல்லது தியானம் செய்யலாம். பின், கீழ்க்கண்ட கேள்விகளுக்கு நம் அடிமனதிலிருந்து வரும் உண்மையான பதிலை, மனதில் பதிவு செய்ய வேண்டும்.

வெற்றியின் ரகசியம்

* நான் அடிப்படையில் எப்படிப்பட்ட மனிதர்?
* எது நிரந்தர மகிழ்ச்சியையும், துக்கத்தையும் கொடுக்கும்?

* மிகவும் பிடித்தது மற்றும் பிடிக்காதது என்ன?
* வாழ்க்கையில் வெற்றியடைய என்னவெல்லாம் சாதிக்க வேண்டும்?

* என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன அபிப்ராயம் வைத்திருக்க வேண்டும்?
* என்னுடைய பலம் எது, பலவீனம் எது?

* என்னுடைய முன்மாதிரி மனிதர்கள் யார்; எதனால்?
* வருங்காலத்தில் யாரைப் போல் ஆக வேண்டுமென்று விரும்புகிறேன்?

மேற்கண்ட கேள்விகளுக்கு பதில்களை ஆராய்ந்து பார்த்து, முரண்பாடான விஷயங்களையும், நடைமுறைக்கு ஒத்து வராத யோசனைகளையும், தவிர்த்து விடவேண்டும்.

அதையே எழுதி வைத்தால், நம்மைப் பற்றியும், நாம் சாதிக்க நினைப்பதைப் பற்றியும், அதற்காக செய்ய வேண்டிய தியாகத்தைப் பற்றியும், தெளிவும், மன வலிமையும் கிடைக்கும். இப்படி எழுதி வைத்ததைப் பத்திரப்படுத்தி வைத்தால், வாழ்க்கையில் குழப்பம், சலிப்பு மற்றும் சோர்வு ஏற்படும் போது அதை எடுத்துப் படித்தால், நிச்சயமாக புத்துணர்வு கிடைக்கும்; மன உறுதியும், தெளிவும் பிறக்கும்.

வாழ்க்கையில் என்ன வேண்டுமென்பதில் தெளிவு இருந்தால் மட்டும் போதாது, என்ன தேவையில்லை என்பதிலும் தெளிவு வேண்டும். சிலருக்கு, வருடா வருடம் வாழ்க்கையின் லட்சியங்கள் மாறிக் கொண்டேயிருக்கும். இதற்கு முக்கியக் காரணம், இவர்களுக்கு எந்த லட்சியத்திலும் தீவிரமான பற்று இருப்பதில்லை. மேலும், வெற்றியடைந்த யாரைப் பார்த்தாலும், அவர்களைப் போல வர வேண்டும் என்று, திடீர் ஆர்வம் காட்டுவர்.

குறிக்கோளை நிர்ணயம் செய்யுமுன், நம்மை நம்பியுள்ள குடும்பத்தினரைக் கலந்து ஆலோசிப்பது அவசியம். அவர்களுடைய ஆதரவு இல்லாதபோது, நம்முடைய லட்சியப் பாதையில் சறுக்கல் வரலாம். தேவைப்பட்டால் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்களிடத்தில் கருத்து கேட்கலாம்.

ஒவ்வொரு நிகழ்வும், இந்த உலகத்தில் இருமுறை நிகழ்வதாகக் கூறுகின்றனர். ஒன்று மனத்திரையில்; இன்னொன்று நிஜத்தில். அதனால், ஒவ்வொரு நாளும் நம் அன்றாட வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன், நாம் என்னவாக வேண்டும் என்பதை மனத்திரையில், பதிவு செய்ய வேண்டும்.

நாம் எந்த நிலையை அடைய வேண்டுமென்று, மனதில் ஆழமாகப் பதிவு செய்கிறோமோ, அந்த நிலையை விரைவில் அடைவது உறுதி.

 அறிவுக்கும் வெற்றிக்கும் சம்பந்தம் இல்லை என்று எல்லோரும் ஒப்புக்கொள்கிறார்கள். அதேபோல, தயாரிப்புப் பொருட்கள், நிறுவனங்கள், தனி மனிதர்கள், தலைவர்கள் என எதை, யாரை எடுத்துக்கொண்டாலும், அவர்கள் வெற்றிக்கு அடித்தளம், மக்கள் மனங்களில் அவர்கள் உருவாக்கியிருக்கும் நல்ல அபிப்பிராயம்தான் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். இப்படி நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்துவதைத்தான் பொசிஷனிங் என்று மேலாண்மை மேதைகள் சொல்கிறார்கள்.

பிறர் மனங்களில் தெளிவான, சாதகமான பிம்பத்தை உருவாக்க, எல்லோரிடமும் நான்கு ஆயுதங்கள் இருக்கின்றன. இவற்றை நான்கு P-க்கள் என்று சொல்வார்கள். அவை:

Product (பொருள்)

Price (விலை)

Promotion (விற்பனை மேம்பாடு)

Physical Distribution (விநியோகம்/ பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் முறை)

புத்திசாலிகள் இந்த நான்கு ஆயுதங்கள் மூலம் தங்களுக்குச் சாதகமான, தனித்துவ பிம்பங் களை மக்கள் மனங்களில் உருவாக்குகிறார்கள்.